தூக்கி எறியப்பட்ட கவிதைகளின் கண்ணீர்

சீர் இல்லாத கவிதை
கவிதைத் தேர் ஏறாது

மோனை வராத கவிதை
கவிதை மோட்சம் பெறாது

எதுகை படாத கவிதை
கவிதை யாக ஏற்கப் படாது

இயைபு இல்லாக் கவிதை
கவிதை யாய் இருந்தென்ன லாபம்

சந்தம் வந்து சந்திக்காத கவிதை
சுத்தம் இருந்தும் சுகாதாரம் இல்லாத சுகாதார நிலையம் போலத்தானே

நல் அடி படாத கவிதை
புது மனை புகுந்த
புதுப் பெண் போல்
அடிக்கடி இடிபடும் இடர் படும்

தளை வாராத தளிர்க் கவிதையின்
அலங்கோலம் கண்டு தவிர்க்கத் தானே செய்வர் தன் நிகர் இல்லாத தமிழ் வளர்ப்போர்.....

எழுதியவர் : வ. செந்தில் (7-Dec-21, 9:56 pm)
சேர்த்தது : Senthil
பார்வை : 86

மேலே