அந்தி சாயும் போது இன்று விடுமுறையா
நிலவு பொழியும்போது உன்நினைவில் நனைவேன்
கனவு விரியும்போது உன்காட்சியில் மகிழ்வேன்
அந்தி சாயும்போது இன்று விடுமுறையா
உன்கனவிற்காகக் காத்திருப்பேன் இரவுத் துயிலில் !
நிலவுபொழி யும்போது உன்நினைவில் நான்நனைவேன்
உன்கனவின் காட்சியில் நான்துயி லில்மகிழ்வேன்
அந்திசா யும்போது இன்று விடுமுறையா
காட்சி கனவிலோ இன்று ?
----வரிகள் வெண்பா வடிவில்