இன்பம் கண்டது மனம்

தாமரைக் கண்ணி அவள் கண்ணின்
மணியின் ஒளியில் என்மனதில் ஞானம்
பிறந்தது அவள்மீது அன்பு சேர்த்தது
காமம் மறைந்து தூய காதல் வந்தது
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று
கேட்டு திரிந்த என்மனம் இப்போது
இன்பம் கண்டது மனம் குளிர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Dec-21, 5:54 pm)
பார்வை : 199

மேலே