பேய்மிரட்டி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

மாந்தக ணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி
சேர்ந்து வருகரப்பான் தீச்சுரமும் - பேர்ந்துவிடும்
வேய்மிரட்டுந் தோளுடைய மெல்லியலே ராசியமாய்ப்
பேய்மிரட்டி யென்றொருக்காற் பேசு

- பதார்த்த குண சிந்தாமணி

இச்செடியினால் மாந்தம், கழிச்சல், வயிற்றுவலி, கரப்பான், அதிகமான சுரம் ஆகியன போகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-21, 2:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே