பிரசவ வலி

சில நேரங்களில்
உடலின் வலிகள்
உள்ளத்தின் வலிகள்
இரண்டும் இணைந்து
கலங்காத மனிதனின்
கண்களிலும்
கண்ணீரை வர செய்து
கலக்கம் கொள்ள செய்யும் ...!!

ஆனால்....
பெண்கள் மட்டும்
தங்களின் "பிரசவ வலியை"
ஆனந்த கண்ணீரோடு
பொறுத்து கொண்டு

தான் பெற்று எடுத்த
பிஞ்சு முகத்தினை பார்த்து
கொஞ்சி மகிழ்ந்து
உச்சி முகரும் போது...!!

தான் அனுபவித்த
"பிரசவ வலி"
சுகமான வலி யென்று
சந்தோஷம் கொள்வார்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Dec-21, 9:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pirasava vali
பார்வை : 120

மேலே