இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்
படிக்கையிலே நற்மாணவன் என்பதற்கு வீரவாள் பரிசு
சீனாவுடன் போரின் போது தலைமை தாங்கியே
பரம்பரையாக இராணுவத்திலே பதிவியேற்று மிடுக்காய்
பல விருதுகளை பெற்றே தலைமை தளபதியாய்
முதல் முறையாய் முப்படைக்கு ஒரே தலைவனாய்
வானூர்தியின் இறங்குதலின் போது வெலிங்டனில் மாண்டார்
மனைவி மதுலிக்கா ராவத்துடன் பதினொருவர் மாண்டனர்
விமானி வருண்சிங் மட்டுமே மீட்கப்பட
இந்தியாவில் எங்குமே பெரும் அதிர்வலைகளே
டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தே
கோவையில் இருந்து வெலிங்டன் சென்ற வானூர்தியால்
ஏற்பட்ட விபத்தால் கரிக்கட்டையாய் உடல்கள் சிதைந்தனரே
யாவரும் இறைவனை அடைந்து நற்புகழடைய துதிக்கிறோம்.
----- நன்னாடன்