கீறல்கள்
வானத்தின் "கீறல்"
மின்னல்
மண்ணின் "கீறல்"
பயிர்
மனதின் "கீறல்"
நினைவு
காதலின் "கீறல்"
பிரிவு
"கீறல்கள்" இல்லாமல்
மனிதனின்
வாழ்க்கையில்லை
சில "கீறல்கள்"
மனிதனின்
வாழ்க்கைக்கு அவசியம்
சில "கீறல்கள்"
மனிதனின்
மன பக்குவத்திற்கு அவசியம் ...!!
--கோவை சுபா