மலர் மனமே
" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள்,
மலர்கள் தூவி பூஜை செய்தால்,
அம் மலர் போல் உன்னை
ஏந்திடுவாள்.
" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள்,
1. சரணம் என்றே சென்றடைந்தால்,
அபயம் தந்து காத்திடுவாள்.
மரணம் கூட வந்தாலுமே,
அரணாய் நின்று அதை
மாற்றிடுவாள்.
" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள்,
2. துன்ப மேகம் சூழும் நேரம்,
அன்னை அவளை சேர்ந்து விடு.
இன்ப ஒளியை தந்திடுவாள்,
உன்னை அன்பால்
தேற்றிடுவாள்."
" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள், "