பண்பாடா
பார் போற்றும் பழங்கால
பாரத தேசம்
மருத்துவம், சோதிடம்
மற்றும் வான சாஸ்திரமென
அனைத்திலும் வான் தொட்ட
வித்தகர்கள் வாழ்ந்த பூமி ,
இருந்தும்
பிறருக்குக் கற்றுக் கொடுத்து
பாதுகாக்க எண்ணாததால்
பாழானது முழுதுமாக
அகத்தியர் என்பவரும் , தான்
அறிந்த மருத்துவ முறைகளை
அடுத்தவர் அறியாதிருக்க
படிக்கத் தெரியாத ஊமையை
பணியில் வைத்திருந்தார்
அவர் பெயர் தேரையர்,
இவர் ஊமைபோல நடித்து
அகத்தியர் அறியாவண்ணம்
மருத்துவம் கற்றறிந்தாலும்
அகத்தியரின் சாபத்தால்
அனைத்தையும் இழந்தார்
சில காலங்களுக்கு முன்
சித்த ஆயுர்வேத மருத்துவத்தில்
சிறந்து விளங்கிய ஒரு மருத்துவர்
மகனைத் தவிர மற்றவர்க்குக்
கற்று தர மறுத்த மருத்துவரை
கடவுள் தண்டித்ததுபோல்
மகன் இறக்க, ஏக்கத்தில்
மருத்துவரும் உயிர் துறந்தார்
அவர் கற்ற மருத்துவம்
அவரோடு அழிந்து போனது
பாரத மண்ணில்
பரம்பரையா வந்ததுபோல்
ஏழை, எளிய மக்களுக்கும்
மலை சாதி , தாழ்த்தப்பட்டோர் என
எல்லோருக்கும் முறையாகக்
கல்வியறிவை கற்று தராமலும்
கற்க வழிகாட்டாமலும் இருப்பது
பரம்பரைப் பழக்கமா ?—இல்லை
பிற்பட்டவர் உயர்ந்து விடாமல்
பார்த்துக் கொள்ளும் பண்பாடா !