கடவுள்
அண்ணாந்து மேலே பார்க்கிறேன்
வானம் என்பது எங்கே இருக்கிறது
என்று தெரியாது பின் ஏன் அது வானம்
மேலே சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்
அத்தனையும் காண்கின்றேன் அப்போது
மனம் சொல்கிறது இவற்றை அத்தனையும்
தாங்கி நிற்பது எது அது வானம்தானே ?
இப்போது தெரிகிறதா ..... அத்தனை
இயற்கையையும் தாங்கி நிற்பவன்
ஒருவன் இருக்கின்றான் அந்த
வானம்போல தெரியாமல் தெரிந்து
காணமுடியாதவை எல்லாம் இல்லை
என்பதாகாது நம் கண்ணிற்கு அந்த
சக்தி இல்லை அத்தனையே ஆனால்
நம் புத்திக்கு அதை ஊகிக்க முடியும்