பஞ்சமில்லை
" அசைந்தாடும் மரங்களின்
செழுமை,
நகர்ந்தோடும் மேகங்களின்
கருமை,
குதித்தாடும் மயிலினங்களின் அருமை,
இவையனைத்தும் இயற்கையின் திறமை,
கவியின் கற்பனையில் இணைந்தால்,
கவிதைக்கு சேர்க்கும் பெருமை!
இயற்கை இருக்கும் வரை
கவிதைக்கு பஞ்சமில்லை!
இயற்கையை காக்கும்
வரை கவிகளுக்கு
அச்சமில்லை.! "