காற்றுடன் கலந்துரையாடும் போது

காற்றுடன் கலந்துரையாடும் போது

காற்றுடன்
அசைந்தாடியபடி
கலந்துரையாடி
கொண்டிருக்கின்றன
செடிகளின் கிளைகள்

செடிகளில்
பூத்திருந்த பூக்கள்
காற்றோடு

அருகில் இருக்கும்
வண்டுகளுக்கு
இரகசியமாய்
தூது விட்டு
கொண்டிருக்கிறது

தான் சூல்
கொள்ள தயாராகி
விட்டதாக

அதனால்
எங்கும் மணம்
வீசும் அதன்
வாசம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Dec-21, 11:32 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 156

மேலே