அரண்மனை துறந்த சுகபோக வாழ்வு

45 ஆண்டுகள் உலக வாழ்வுக்கு பின் வாங்கினேன் ஒரு அரண்மனை வீட்டை
17 வருடங்கள் அரண்மனையின் இந்தபுரத்திலும் அந்தபுரத்திலும் வேட்டை!
30 ஆண்டுகள் வேறு மாநிலத்தில் வேலைநிமித்தமாக வாழவேண்டி கட்டாயம்
என் மொழி, தமிழ் மொழி பேச அதிக வாய்ப்பின்றி மனதில் ஒரு பெரிய காயம்!
கோவை சிறுவாணி பாவை எங்களை வருக என்று அன்புடன் வரவேற்கிறாள்
உள்ள அரண்மனை வீட்டை நல்ல ஒரு குடிமகனுக்கு விற்றிட உரைக்கிறாள்!
விற்க மனமில்லாததால் இந்த அரண்மனையை வாடகைக்கு விட்டிட திட்டம்
இதற்கான விளம்பரத்தை இணையதளத்தில் ஏற்றினேன், இது முதல் கட்டம்!
சிறுவாணி நீருக்காக ஒரு சிறுவீட்டில்தான் நாங்கள் குடிபோக இருக்கிறோம்
இதற்காக 17 வருடம் அனுபவித்த எண்களின் அரண்மனையை துறக்கிறோம்!
வீட்டோடு வசித்து வந்ததால் அவளுக்கு ஏக்கம் ஆனால் உண்மை மறுபக்கம்
ஆயினும் நம் மாநிலத்திற்கு வருவதால் மக்கள் எல்லோரும் எனக்கு பக்கம்!
உடல் உள்ள நலத்திற்காக நான் விரும்பும் கொங்குநாட்டுக்கு பெயர்கிறோம்!
கோவையின் சூழலில் நாங்கள் உற்சாகமாக வாழ்வோம் என்று நம்புகிறோம்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Dec-21, 9:04 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 35

மேலே