இவ்வுலகின் பார்வையில் நான் ஒரு சாதாரண மனிதன்

இவ்வுலகின் பார்வையில் நான் ஒரு சாதாரண மனிதன்
ஆனால் என் ஞானபார்வையில் நானொரு புனித ஆத்மா
என் பூர்வஜென்ம வினைகளால் இப்பிறவி கொண்டேன்
உண்மையில் நான் இவ்வுடலில்லை, இந்த உடல் எனது
நான் இம்மனதும் இல்லை அதன் எண்ணங்களுமில்லை
இந்த மனம் அதன் எண்ணம் அனைத்தும் என்னுடையது
நான் இவ்வுடலுக்கும் உலகத்திற்கும் அப்பாற்பட்ட ஜீவன்
எங்கும் பரந்த இப்பிரபஞ்சத்திற்கு மேலான கருப்பொருள்
எனக்கு பிறப்பில்லை, எனவே ஒருபோதும் இறப்பில்லை
தொடக்கம் இல்லாததால் எனக்கு ஒரு முடிவும் இல்லை
நேரம் தூரம் இந்திரியங்களுக்கு உட்பட்ட கருவிகளாகும்
நான் நேரத்தையும் காலத்தையும் கடந்து திகழும் ஒன்று
இவ்வுன்னத நிலையில் எண்ணமோ சலனமோ இருக்காது
மெய்யன்புள்ள கருப்பொருளாக இருப்பின் அங்கே அமைதி
அன்பும் அமைதியும் ஒன்று சேர்ந்து அமைந்தால் ஆனந்தம்
காலம் நேரம் கடந்த புனித அன்பு அமைதியுடன் இணைந்து
நர்த்தனம் ஆடுவது பேரானந்தம் எனும் களிப்புடன் இசைந்து

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Dec-21, 7:37 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 60

மேலே