கோட்டயம் செல்லும் வழி - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

கோட்டயந்தான் செல்லுவழி தேடி வந்தேன்
..குறும்பலகைக் கைகாட்டி காட்டி நிற்க
நோட்டமுடன் பார்த்தேனே வானம் நோக்கி!
..நுவலுகின்ற கைகாட்டி மேலே நோக்க
வாட்டமுடன் வலமிடமாய் மற்ற கைகள்;
..வழிகின்ற முகத்துடனே வாடி நின்றேன்!
நாட்டுநலன் வேண்டுவரே நயமில் கள்ளை
..நாளுமினிக் குடித்திடீரே நயந்து சொன்னேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Dec-21, 12:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே