கொரனாத் தாக்கம் குறைந்தது வென்பேன் - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(நெடிலீற்று மா + நேரசையில் தொடங்கும் சீர் + மற்றச் சீர்கள் வெண்டளையில் அமையும். ஏழாம் சீர் மாச்சீராக அமையும்) (1, 5 ஆம் சீர்களில் மோனை)
கொரனாத் தாக்கம் குறைந்தது வென்பேன்
..குறைவிலா இன்பமுந் தாமே;
அரசே நல்ல முயற்சியுஞ் செய்தே
..அதற்குமே போட்டதே ஊசி!
பரிவாய்ச் செய்த உதவியுந் தானே
..பரிசெனத் தீர்த்தது நோயை;
அரிதாய் வந்தயிந் நோயும் வராமல்
,,அடித்து விரட்டினோம் நாமே!