காதல் மேகம்
வானத்தில் பகலும் இரவும்
மாறி மாறி வந்தபோதிலும்
வானவெளியில் "மேகங்கள்"
தங்களின் பயணத்தை
நிறுத்திக் கொள்வதில்லை....!!
அதுபோல்தான்
வாழ்க்கையில்
இன்ப துன்பங்கள்
மாறி மாறி வந்தபோதிலும்
என் இதய வானில்
நம் "காதல் மேகங்கள்"
நில்லாமல் பயணித்து
கொண்டே இருக்கும்....!!
--கோவை சுபா

