போன் பேச்சு
********************
போன்பேச்சு
ஒரு காலத்தில் போன். என்பது ஆடம்பரப்பொருளா கருதப்பட்டது. அன்று போன் இல்லாமல் நான் பட்ட அவஸ்தை எனக்கு தெரியும். பல கிராமங்களில் போன்களே கிடையாது. எங்க ஊரிலே போஸ்ட் ஆபீசிலும், ஊர் பெரிய மனுஷர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் வீட்டிலும் லாண்ட்லைன் என்று சொல்லப்படும் போன்தான் உண்டு. போன் வைத்திருப்பவர்கள் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அளவிற்கு அது ஒரு லக்சரியாக கருதப்பட்டது. 1991 ம் ஆண்டு நரசிம்மராவ் நாட்டின் பிரதமராக வந்த போது ஏற்பட்ட குளோபலைசேஷனுக்குப் பிறகு போன் வைத்து இருப்போரின் தொகை கணிசமாக உயர்ந்தது. வீதிக்கு ஒரு போன் கூட இல்லாத நிலைமை மாறி இன்று போன் இல்லாத வீடுகளே கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. செல்போன் வந்தாலும் வந்தது, இப்போது நடுத்தர மக்கள் வீட்டில் குறைந்தது இரண்டு போனாவது இருக்கிறது. கணவனிடம் ஒன்று. மனைவியிடம் ஒன்று. அது தவிர இன்று பள்ளி மற்றும் காலேஜ் செல்லும் மாணவ மாணவுகள் கைகயில் கட்டாயம் ஒரு போன் இருப்பதைப்பார்க்கலாம். அவ்வளவு ஏன்? அநேகமாக எல்லாத்தொழிலாளிகளிடையும் போன் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் பிச்சைக்காரர்கள் தங்கள் வருகையை முனனமேயே அறிவித்து நம் வீட்டு வாசலுக்கு வந்து உங்களுக்கு ஒரு போன்கால்போட்டு பிச்சை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “நான்தான் உங்கள் வீட்டிற்கு இந்த நேரம. வருவேன் என்று போனில் சொன்னேனே. நீங்கள் ரெடியாக பிச்சையை எடுத்து வைத்துக்கொள்ளாதது உங்கள் தவறு” என்று அதிகாரப்பிச்சையில் ஈடுபடலாம்.
வீட்டிற்குள்ளேயே “டேய், படவாப்பயலே, எத்தனை நேரம தாண்டா, நான வெயிட் பண்றது?. இன்னும் நீ அஞ்சு நிமிஷத்துக்குள்ளே சாப்பிட வரல்லேன்னா, நீயே கிச்சனுக்குப்போய் எடுத்துப்போட்டுக்கிட்டு சாப்பிட வேண்டியதுதான். அதேபோல் பக்கத்து வீடடிற்கோ அல்லது தெரிஞ்ச வீடடுக்கோ போன் பண்ணி “கொஞ்சம் சக்கரை இருந்தா அரை டப்பா கொடுத்து அனுப்பு. நான் அடுத்த வாரம் திருப்பித் தந்துடறேன என்றோ, தம்ம வீட்டுக்கு திடீர்னு கெஸ்ட் ஒருவர் வந்துட்டதாலே கொஞ்சம் சாம்பார் இருந்தா ஒரு டம்ளர் சாம்பார் அனிப்பு என்றோ கேட்கலாம். வாத்தியாரே, இன்னிக்கு ஸ்கூல் கிடையாதுன்னு என்பையன சொலறானே. அது நெஜந்தானா எனற மாதிரி சந்தேகங்களைத்தீர்த்துக்கலாம். சாஸ்திரிகளே, நாளை எஙக அப்பா தவசம் இருககு. மறந்துடாம கரக்டா 8 மணிக்கெல்லாம் வந்துடவும் என்று கோரிக்கை வைக்கலாம். இது போல ஒண்ணா, ரெண்டா, ஆயிரம் செய்யலாம். மிஸ்டு கால் கொடுத்தே ஓசியிலே சில காரியங்களை சாதிக்கலாம். சலூன்லே டைம்கேட்டு புக் பண்ணிக்கலாம். ஓட்லுக்கும் அந்த மாதிரி புக் பண்ணிக்கலாம். சில ராங் கால்களினாலே வாழ்க்கையே ரொம்ப சுவாரசியமா ஆனதைப்பாரக்கலாம். .
டெலிபோன் வந்த பிறகு பொது வெளியிலும், ரோட்டிலும் பேசுவோர் தொகை அதிகம் ஆகிவிட்டது. காதில் போன் வைத்துப் பேசாதவர்கள் எண்ணிக்கை வர வர குறைந்து கொண்டே வருகிறது.செல்போன் வருவதற்கு முன் பலரும் பப்ளிக் பூத்துக்குத்தான். போவார்கள் போன் பேச. அன்றைய நிலையில் நானும் என் நண்பனுக்காக போன் செய்ய அங்கு நின்று இருந்த க்யூவில் கால்கடுக்க நின்றேன். அதே போல காத்திருந்து ஒரு பப்ளிக் பூத்தில் உள்ளே நுழைந்த ஒருவர் அரை மணி நேரமாக போனைக்காதில் வைத்துக்கொண்டு பேசாமல் தலையை மாத்திரம் ஆட்டிக் கொண்டு இருந்தார். வெளியிலே காத்திருந்தவர்களுக்கு சரியான கடுப்பு. ஒருவர் வேகமாக கதவைத்திறந்து “என்னங்க நீங்க பாட்டுக்க போனை காதுலே வெச்சிக்கிட்டு போனை எடுக்காமல் இப்படியே மணிக் கணக்கா உள்ளேயே இருந்தா,,, நாங்க எப்ப பேசறது என்று கேட்டபோது , “ஐயா அவசரப்பட்டா எப்படி? என் மனைவி பேசி முடிச்ச உடனே தானே நான் பதில் சொல்ல முடியும். இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே அவ பேசி முடிச்ச உடனே இங்கே நிறைய பேர் காத்துக்கிட்டு இருக்கறதாலே அப்புறமா நான் வீட்டுக்கு வரும்போது பாக்கியைப் பேசித் தீர்த்துக்கலாம்னு அவளிடம் சொல்லி விடுகிறேன்” என்றானாம். இப்படியாக இப்பொழுது போன் பேச்சாளர்கள் என்ற புது வகை பேச்சாளர்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் உலகிலேயே போனில் அதிகம் பேசுபவர்கள் இந்தியர்கள்தான் என்ற பெருமை நமக்கு இருக்கிறது. அதிலும் பெண்களுக்கே முதலிடம்.
எத்தனையோ பேர் நடு ரோட்டில் போகும் வாகனங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் போனை ஒரு காதில் வைத்தபடி தலையை சாய்த்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டே போவதைக் காணலாம். இப்பேர்ப்படடவர்களால் நாட்டில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன என்றுஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது..
ஒரு சமயம் என்நண்பரின் நண்பர் ஒருவர் தன் தலையை இடது பறம் சாய்த்த வாறே நடந்து வந்து கொண்டிருந்தார். விசாரித்தபோது அவர் அல்லும் பகலும் அனவிரதமும் இடது காதில் போனை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டே தலைசாய்த்தபடியே நடப்பார். இப்ப ரெண்டு நாளாக அவர் போன் தொலைந்து போய்விட்டதாம். ஆனாலும் அவர்கழுத்து பழக்க தோஷத்திலே இடது பக்கமே சாய்ந்து அவரால் இன்று கழுத்தை நேராக நிமிர்த்தி நடக்க முடியவில்லையாம்.
ஒருவர் ஊரே திரும்பிப்பார்க்கும்படி உரத்த குரலில் அமெரிக்காவில் இருக்கும்தன் பையனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த என் நண்பர் ஊரெல்லாம் இவர் வீட்டு சமாசாரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் போல இருக்கு என்றார். “இவருக்கு போனே தேவை இல்லையே. பேசாமல் கனெக்ஷன் கிடைத்த உடன் போனை ஆஃப் செய்துவிட்டு இவர் பேசினாலே அமெரிக்காவில் இருக்கும் இவர் பையனுக்குக்கேட்குமே” என்றார். ஆக போன் வந்த பிறகு பல வீட்டு ரகசியங்கள் இன்று ரோடு ரோடாக அலசப்படுகின்றன. ஒரு அரசயல்வாதி தன்போன் ஒட்டிக்கேட்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் அப்படிக் கவலைப்படத்தேவையே இல்லை. இவர் மேடை ஏறி மைக் புடித்துப் பேசும்பொழுதே இவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும்புரியாத போது, இவர் போனை ஒட்டுக் கேட்டு என்னத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கட்சியினரே முடிவு செய்து விட்டனர். போன் பேச்சு என்பது கிட்டத்தட்ட இன்று மேடைப்பேச்சளவிற்கு வளர்ந்து விட்டது. இதில் பலர் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார்கள் போனில் மணிக்கணக்காக பேசுபவர்களைப்பர்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இதில் பெண்கள் அசகாயசூரிகள். அவர்களில் கொஞ்சம் வயதானவர்களாக இருந்தால்கூட அன்றைய சாப்பாடு, சமையல் பற்றியே நான் கேட்ட வரையிலும் பெரும்பாலும் இருந்து இருக்கிறது. சிலர் சமையல் ரெசிபியை டிவி அளவிற்கு ஒபபுவிப்பார்கள். ஒரு சிலர் அமெரிக்காவில் இருக்கும் தன் பெண்ணுக்கு வெந்தயக்குழம்பு வைப்பது எப்படி, மைக்ரோவேவில் அப்பளம் சுடுவது எப்படி என்று வீடுயோ கால் மூலம் டெமான்ஸ்டிரேட்டே பண்ணுவார்கள். இட்டிலிககுக் குக்கர் எவ்வளவு விசில் அடிக்க வேண்டும் எனறு தன் பெண் கேட்கும் கேள்விக்கு உங்க அப் பாவுக்குத்தெரிஞ்சது கூட உனக்குத்தெரியாம போச்சே என்று தலையில் அடித்துக் கொண்ட படி பதில்சொல்வார்கள் . இப்போது வாடஸ்அப் வந்தபடியால் இண்டர்நேஷனல் கால் பற்றிய பில் பயம் இல்லாமல் மணிக்கணக்கில் வீட்டுத் தாழ்வாரத்தில் அரட்டை அடிப்பது போல்அடிப்பார்கள். போதாத தற்கு ஒரு சிலர் வெவ்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் இருக்கிற தங்கள் உறவினர்களுடன் கான்பரன்ஸ் கால் போட்டு அசந்தால் மோடியையும் அந்த கான்பரன்சுல் சேர்த்துக் கொண்டு பேசி அலசிவிடுவார்கள்.
சிலர் ஊர்வம்பை பிராட்காஸ்ட் பண்ண போனை உபயோகிப்பதையும், ஒருவர் இன்னொருவரிடம் ஊர்காதில் விழும்படி இது ரகசியம், யாருக்கும் சொல்லாதே என்று உரத்த குரலில்சொல்லக்கேட்டு இருக்கிறேன்... ஆனால் என்னைப் போல ஒரு சிலர் அவசர அவசரமாக பேச்சை சுருக்கி பேராபிரேஸ்( paraphrase) செய்து பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் போனில் பேச எந்தத் தனித் தகுதியும் வேண்டாம். வாய்இருந்து பேசத் தெரிந்து அதற்கான பில்லை உங்களால் கட்ட முடிந்தால் போதும். இப்போது இதுவும்கூட தேவை இல்லை.
இப்போது என் காது டோடல் டேமேஜ் ஆகிவிட்டபடியால் கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாக நான் போனை பயன் படுத்துவது இல்லை. இந்த இடைவேளையில் போன் பேச்சில் எவ்வளவோ முன்றேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டு பேச வீடியோ கால் வசதி வந்து விட டது. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும்பைசா செலவில்லாமல் பேசும் வசதி வந்து விட்டது. மேலும் போன் பயன்படுத்துவோர் தொகை நாளுக்கு நாள் உலகில் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் வானவெளியில் சப்த அலைகளின் போக்கு வரத்து அதிகம் ஆகிவிட்டது. இது எந்த மாதிரி எதிர் விளைவுகளை நம் வாழ்வில் தோற்றுவிக்குமோ தெரியவில்லை. போன் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்றாகிவிட்டது