சாய்ராம்

" சத்தியமே சாயி!
நித்தியம் நீ சேவி,

கலியுக வரதன் அவனே,
கற்பக விருட்சம் தானே,
சமயம் இதுவென உடனே
பணிந்திடு நீ ,

சத்தியமே சாயி!
நித்தியம் நீ சேவி,


1. முன் ஜென்மத்தின் புண்ணியம்
சாயியை கண்டிட கண்களும்
இருக்கிறதே,
என் ஜனனத்தின் பாக்கியம்
நாதனை வணங்கிட கைகளும்
துடிக்கிறதே,

குழந்தையின் மழலையும்
இசையென மாறிடும்,
கானங்கள் கேட்கையில்
தனை மறந்தாடிடுமே
என் தெய்வம்தான்.

சத்தியமே சாயி!
நித்தியம் நீ சேவி,


2. ஏதேதோ அற்புதம் சாயின்
வடிவில்.உலகினில்
நடக்கிறதே,
எங்கெங்கோ பொற்பதம்.
அருளினைவழங்கிட
நடையாய் நடக்கிறதே ,

பாவத்தின் பலன் அது
தீ என சுடுகையில்,
காலத்தில் அருள் மழை
நம்மிலே பொழிந்திடுமே
சாயினால்,

சத்தியமே சாயி!
நித்தியம் நீ சேவி,

எழுதியவர் : (24-Dec-21, 10:32 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 90

மேலே