வாழ்க்கை சக்கரம்
முடிவு என்பது முடிவல்ல
அது ஒரு தொடக்கம் தான்
ஒரு முடிவில் இருந்துதான்
மற்றொன்று ஆரம்பமாகிறது ..!!
இது புரியாமல் பலரும்
என் வாழ்க்கையில்
எல்லாம் முடிந்து விட்டதே
என்று வருத்தம் கொள்கிறார்கள்.
ஒரு ஆரம்பம் என்றால்
அதற்கு முடிவு என்பது
நிச்சயம் இருக்கும் மனிதா ...!!
மனிதர்களின்
வாழ்க்கை சக்கரம்
இப்படித்தான் சுழன்று
கொண்டே இருக்கும் ...!!!
--கோவை சுபா