கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே;
கண்ணீர் விடாதே;
கண்ணீர் சிந்தும் கண்களிலும்;
கருணை வழியும் மறந்துவிடாதே.
காலங்கள் சோகங்களைச் சுமக்கும்;
காட்சிகளும் மாறிப்போகும் ;
கால்கள் பாதையைக் கடக்கும்;
காயங்களும் ஆறிப்போகும்;
கற்பனை மாறிப்போகும்;
கனவுகள் களைந்துபோகும்;
கவலைகளும் காணாமல்போகும்;
கண்ணீரும் வத்திபோகும்;
கவலைப்படாதே.
கண்ணே கண்ணே;
கண்ணீர் விடாதே;
தோள்கள் சுமையை சுமக்கும்;
தொல்லைகள் பறந்தோடும்;
கவலைப்படாதே.
தோற்றவனும் ஒரு நாள் வெற்றிபெருவான்,
கவலைப்படாதே.
கண்ணே; கண்ணே;
ஏன் இந்த சோகம்,
காற்றும் தென்றலை வீசும்,
கஷ்டங்களும் ஒரு நாள்
கற்கண்டாய் இனிக்கும்;
கவலையும்
கற்பூரமாய் கரைந்துபோகும்.
கவலைப்படாதே.
பூக்காளாய் புன்னகை பூக்கும்
நாட்களும் உதிர்ந்து ஓடும்;
நம் மனச்சுமையும் இறங்கிடும்
கண்ணீர் விடாதே;
இமைகள் கூட சுமைதான் இரக்க இல்லாமல் வழியும் கண்ணீரை மூடி மறைக்க நினைக்கும் போது.
அடப் பெண்ணே பெண்ணே;
காயப்படாத மனதும் இல்லை;
கண்ணீர் சிந்தாத விழிகளும் இல்லை;
விடியல் இல்லா பொழுதும் இல்லை;
விடையில்லாத கேள்வியும் இல்லை;
விடுதலையில்லா சோகமும் இல்லை;
கவலைப்படாதே.
ஆகாசம் தரையில் விழாது; தள்ளிப்போகாதே,
ஆசைக்கனவுகளை அழித்து போகாதே,
பனியைவிட்டு குளிரும் போவதில்லை,
பசியை விரட்டி வயிறும் படுத்துறங்காது.
அன்னையின் பாசம்
வற்றிப்போகாது;
அன்பை நீயும் மறக்காதே;
சோகத்தை சொந்தங்கள் வந்து
துடைத்துவிடும்.
சோர்ந்து கிடந்தால்;
சோறு கிடைக்காது பெண்ணே.
நாட்கள் நகராமல் இருப்பதில்லை;
நட்சத்திரங்கள் விண்ணில் மினுக்காமல் இல்லை; நறைபிடிக்காத முதுமையும் இல்லை;
நாளும்; பொழுதும் தொடராமல் இல்லை;
நல்லது கெட்டது நடக்காமல் இல்லை.
பூக்குள்ளும் புன்னகைக்கும் இதழுக்குள்ளும்,
தேன்கள் உண்டு மறந்து விடாதே;
புன்னகைக்கு பின்னும் பூகம்பம் வெடிக்கும்,
பயந்து விடாதே.
கவலைகள் எல்லாம் கடல் அலைகள் போல்,
தவழ்ந்தே வரும்;
கட கட வென்றே காற்றில் பறக்கும் தூசியாய் விலகிடும்;
தத்தளித்துச் செல்லும் ஓடமாய்
வாழ்க்கை ஓடும்;
கலங்கிவிடாதே.
தன்நம்பிக்கை என்ற துடுப்பு இருக்க தத்தளித்து நிற்காதே.
வாழ்ந்து கெட்டவன் விழுந்து விட்டால் அவதிதானம்மா;
வையகத்தில் தாழ்ந்து விட்டால்
வதந்தி தானமா;
வாழத்தெரியாதவன் வழுக்கி விழுந்தால், சோகம் தானம்மா; வாழத்தெரிந்தவன்,
வழுக்கிவிழுந்தால் அசிங்கம் தானம்மா;
வாழ்க்கை என்னும் மேடையில்
நாடகத்தை நடத்தி காட்டம்மா;
நடுங்கி நடுங்கி நீ ஒதுங்கி போனால்,
நஷ்டமும் கஷ்டமும் உனக்குத் தானம்மா.
பாசம் விட்டு போனால் பகைமை தானம்மா;
பசியும் தொத்திவிட்டால்
பகைமை ஏதம்மா.
அன்பைச் சுமக்க பாசங்கள் உண்டு,
அள்ளி அணைக்க கரங்கள் உண்டு,
சோகத்தை சுமந்து விடாதே;
சோர்ந்து போகாதே.
சோலைப் பூக்கள் உதிர்ந்தாலும்,
சொந்தம் கொண்டாட,
வேலைக்கு பூக்கள் பூக்கும்;
வெந்து விடாதே.
மாலையில் சூரியன் விழுந்தாழும்
காலையில் உதிக்கும் மறந்துவிடாதே.
நாளை! நாளை! என்ற நம்பிக்கை உண்டு நொந்துவிடாதே.
பனியை பகல் விரட்டும்,
படுத்துறங்க இரவும்
பகலை விரட்டும்,
பழகிக்கொள்ள தயங்காதே.
பசியும் வாட்டிவிடும்,
பயமோ உன்னை கொன்றுவிடும்
பகையோ உன்னை பாழ்படுத்திவிடும்;
பக்குவமாய் வாழ்ந்திட்டால்,
பசுமையாகிவிடும் வாழ்க்கையும்.
நீரும் நெருப்பை அணைக்கும்
நீயும் நானும் நெருங்கிவந்தால்,
தேகங்கள் இணையும்,
சோகங்கள் உதிர்ந்து
சொந்தங்கள் வளரும்.
சோகம் தான் ஏனம்மா.
பாயும் புலியும்
படுத்து உறங்கும்,
பகையைத்தேடி சென்றாலும்
பசித்தால் புள்ளைத் திண்பதில்லை,
புரிந்து கொள்ள மறந்துவிடாதே.
என் உயிரே என் உயிரே
நீ கண்ணீர் விடாதே;
காலத் தேவன் தாங்கிவிடுவான்,
கவலைகளும் காய்ந்துவிடும்;
கசியும் பாசம்
வசியம் செய்துவிடும்;
கண்ணீர் வடிக்காதே;
கண்ணே; கண்ணே;
நகர்ந்து போகாது,
நம்பிக்கை வையம்மா;
அவமானமே வந்தாலும்,
உன் தன்மானத்தை விட்டுத்தறாதே.
சுண்டெலியும் சுறு சுறுப்பாய் சுற்ற வில்லை என்றால் உணவு இல்லை பெண்ணே
சுடரும் தீபத்திற்கும் எண்ணை வேண்டும் பெண்ணே
முடிந்த வரை ஓடு முடிவெடுத்தபின் முடங்காதே பெண்ணே
முட்டுக் கட்டைகள் போட்டால் முழு மூச்சுடன் முட்டித் தள்ளிவிட்டு முன்செல் பெண்ணே
இளமை தேயவேண்டாம்
இதழ்கள் காயவேண்டாம்
இலட்சியங்கள் உறங்கவேண்டாம் பெண்ணே