🥰போதும்🥰
மழலையின்
மழலைச் சொற்களை
கேட்டால் போதும்.......
மனிதனின்
மனிதாபிமானத்தை
பார்த்தால் போதும்.......
காதலில் அன்பை
மட்டும் கண்டு
கொண்டால் போதும்.......
கவலையின் போது
அரவணைப்பு
ஒன்றே போதும்........
காய்ச்சலின் போது
கண்ணுக்கு கண்ணாக
பார்த்தால் போதும்..........
வலிகளின் போது
விழுதுகளாய் உடன்
இருந்தால் போதும்..........
சரிவின் போது
சங்கடம் இல்லாமல் உடன்
இருந்தால் போதும்.......
உதாசினப்படுத்தும் போது
அனைவருக்கும் உதாரணமாக
இருந்தால் போதும்..........
பலவீனமாய் இருக்கும் போது
வெற்றி படி ஏறுவதை மறவாமல்
இருந்தால் போதும்.........
சிலர் சிரிக்கையில்
சிந்தனையுடன்
செயல்பட்டால் போதும்........
அழுகையின் போது
கண்ணீர் துடைக்க உன் கைகள்
இருந்தால் போதும்.........
மரணமே வந்தாலும்
என்னை மறக்காமல்
இருந்தால் போதும்.........
மகிழ்ச்சியின் போதும்
எப்போதும் எனக்காக நீ
இருந்தால் போதும்..........🥰🥰🥰
உங்கள்
😍தமிழ் அழகினி✍️