எங்கள் மகள் பெயர் மந்தி

அழகான இந்திப் பெயரை
எங்கள் பெண் குழந்தைக்குச்
சூட்டி மகிழும் பெற்றோர் நாங்கள்!
பொறாமைப் படுவாரே பலரும்.
அழகான குழந்தை
அவள் பெயரோ 'மந்தி' (Manthi)
இந்தி 'மந்தி' இப்பெயர்
சிந்தனையைப் புரட்டிப் போடும் பெயர்.
பரந்த மனப்பான்மை உள்ளோர்
பாராட்டி மகிழ்வர்
குறுகிய வட்டத்தில் சுற்றித்திரிவோரே
குறை சொல்லித் திரிவார்!
தற்காலத் தமிழரே எங்கள் முன்னோடி
தனித்து நின்று தமிழ்ப் பெயரைச் சூட்டி
அவமானப் பெயரெடுக்க
இடம் கொடுத்தல் சரியாகுமா?
இந்திப் பெயர் சூட்டி
'இந்தி'ய இந்தியரா இருப்பதுவே
எங்களுக்கு புகழ்சேர்க்கும் பெருமை!
இந்திப் பெயர் சிந்தாபாத்து!
■■■◆◆◆◆◆◆■■■■■■■■ ■■■●●●●●
Manthi = thoughtful
இந்திப் பெயர் மோகம்
தமிழரின் தீராத தாகம்!