கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அன்னை மரியின்
வழியாய் வந்தான்
அன்பே தெய்வம்
என்றான்!

அல்லல் பட்டவரை
அணைக்க வந்தான்
அறையும் கைக்கு
மறுகண்ணம் தந்தான்!

பரிசுத்த ஆவியாய்
வந்தான்!
பாரம் சுமப்பவர்களுக்கு
தோள் கொடுக்க
வந்தான்!

பாவமே மரணத்தின்
சம்பளம் என்றான்!
பாரினில் சமாதானம்
நிலைக்க வந்தான்!

குற்றம் கூறி
கல்லெறிந்தவர்ளை
உங்களில் யார்
குற்றமற்றவரோ அவர்
கல்லெறிக என்றான்..

தேவ தூதனாக
வந்தான்!
நம் வேதனை
சுமக்க வந்தான்!

ஊனில்
ஆணி அடித்தார்கள் அவன்
மண்ணில் அன்பை
விதைத்தான்!

மாட்டுத்தொழுவத்தில்
பிறந்தாலும்
மக்கள் தொழும்
உயரத்தில் நிலைதான்!

காட்டிக் கொடுத்தவர்களையும் கருணையோடு
மன்னிக்க வந்தான்!

தடம் மாறிப்போகும்
ஆடு நம்மை
பட்டியைசேர்க்கும்
மேய்ப்பானாக வந்தான்!

இரத்தம் சிந்தி
சிலுவை சுமந்தான்
ரத்தத்தால் பலரின்
துக்கத்தை
பரிசுத்தமாக்கினான்!

இயேசு பிறந்த நாள்
இன்று..
இன்னால் ஒழந்தது
இன்பம் பிறந்தது...
இன்று அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : புஷ்பா குமார் (25-Dec-21, 2:04 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 54

மேலே