வனப்பான வாகனம்
கலித்துறை
இயந்திரம் கொண்டே இயக்கிட ஒருவகை வண்டியை
பயனுறும் வகையில் கண்டு பிடித்து வடித்தே
வியக்கும் வகையில் பலரையும் அதிலே ஏற்றி
இயக்கி சிறப்பாய் பழக்கிய மனிதன் அறிஞனே . --- (1)
இயந்திரம் இயங்கிட மண்ணில் எடுத்த எண்ணெய்
புயலாய் ஓடிட காற்றால் நிரப்பிய சக்கரம்
உயவு களிம்பால் உராய்வை தடுத்து நிறுத்தியும்
அயற்சி இன்றி ஓடவே செய்தவன் அறிஞனே ---(2)
ஒருவன் இயக்கிட மக்களும் பல்வேறு சிப்பமும்
அருமையாய் சென்றிட இருக்கையும் பரணையும் அமைத்தே
சரியான அமைப்பில் ஆக்கியே ஓடிட செய்த
பெருமை கொண்டவன் மனிதன் மாபெரும் அறிஞனே --- (3)
படுத்து எழுந்து நடந்தும் அமர்ந்தும் குளித்தும்
உடுத்தும் உடையை நனைத்து துவைத்து உலர்த்தவும்
குடிக்க தேவையான பாணத்தை தயாரித்து சூடாக்கி
கொடுக்கும் வகையில் வாகனம் செய்தவன் அறிஞனே ---- (4)
---- நன்னாடன்.