அறுபது எனும் அதிசய எண்

இந்த இனிய நாளினிலே
அறுபது வயதை அடைந்து விட்டேன்
பருவங்கள் பலவற்றை பார்த்துவிட்டேன்
இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கி விட்டேன் 

வயது என்பது ஒரு கணக்கு தான்
இங்கு கூட்டல் மட்டும் சாத்தியமே
இந்த கூட்டல் சொல்லும் சாராம்சம்
வாழ்க்கை பாடமாய் அமைந்திடுமே 

சாதனை என்பது ஒரு சிறு வார்த்தை
அதன் உட்பொருளோ மிக அலாதிதான்
என் எழுத்தால் அதனை தொட முயன்றேன்
அந்த ஆதி பகவனும் புன்னகை புரிந்தான் 

வருடம் தோறும் இந்த நாள் வருமே
பலவித வாழ்த்துக்களும் தொடர்ந்திடுமே
ஆண்டவன் ஏட்டில் இது அனைத்தும் 
ஒருநாள் கூத்தாய் முடிந்திடுமே 

இந்த நாளை நினைவு கூர்ந்து
என்னை வாழ்த்தும் அனைவருக்கும்
என் உள்ளத்திலிருந்து சொல்கின்றேன்
நன்றி கலந்த வணக்கங்களை  

ஆனந்த் சுப்ரமணியம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (28-Dec-21, 10:57 am)
பார்வை : 45

மேலே