என் மகனே
மகனே என் மகனே சிவனாய் பிறந்த என் சிறப்பே...
உன் மழலை சிரிப்பில் என் மன பாரங்கள் குறையுதே...
உன்னை கைகளில் ஏந்திடும் போது என் கஷ்டங்கள் தீர்ந்திடுதே...
உன் மெல்லிய சினுங்கள் என்னை மீட்கும் இசையாகிறதே...
உன் பாதம் என் மார்பு பட என்னை மன்னன் போல் உணர்த்திடுதே...
உன் பிஞ்சு கையால் என் முகம் வருட என் மன அழுத்த அழிந்திடுதே...
என் தோளில் நீ சாய்ந்திடவே என் தோழர் போல் இருக்கிறதே...