விக்னேஷ்முருகன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்முருகன்
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  16-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2021
பார்த்தவர்கள்:  1522
புள்ளி:  11

என் படைப்புகள்
விக்னேஷ்முருகன் செய்திகள்
விக்னேஷ்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2022 3:20 pm

படர்ந்திருந்த பனித்துளி மேல் தன் சின்னஞ்சிறு கனி இதழ் பட்டவுடன் சிறகடித்த சிட்டுக்குருவின் இன்னிசையில் தன் தாய் முகம் பார்த்து மெல்ல நகுத்த சிறு மழலையின் சிரிப்பே புதுக்கவிதையின் தலைப்பு…

மேலும்

விக்னேஷ்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2021 6:00 am

மகனே என் மகனே சிவனாய் பிறந்த என் சிறப்பே...

உன் மழலை சிரிப்பில் என் மன பாரங்கள் குறையுதே...

உன்னை கைகளில் ஏந்திடும் போது என் கஷ்டங்கள் தீர்ந்திடுதே...

உன் மெல்லிய சினுங்கள் என்னை மீட்கும் இசையாகிறதே...

உன் பாதம் என் மார்பு பட என்னை மன்னன் போல் உணர்த்திடுதே...

உன் பிஞ்சு கையால் என் முகம் வருட என் மன அழுத்த அழிந்திடுதே...

என் தோளில் நீ சாய்ந்திடவே என் தோழர் போல் இருக்கிறதே...

மேலும்

விக்னேஷ்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2021 5:13 am

பனிக்காற்றில் தலைவியை வாட கண்ட தலைவன் வான்வரை உயர்ந்த சந்தன மரம் ஒடித்து குடிலமைத்து கதிரவனின் ஓர் கதிர் உடைத்து கனலூட்டி இதமளித்தானாம்!!!

மேலும்

விக்னேஷ்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2021 11:07 pm

அந்தி சாயும் மாலைப்பொழுது குழல் முடிந்து மல்லிகை மலர் சூடி மஞ்சள் தேகத்தோடு தலைவனை நோக்கி காத்திருந்தாள் தலைவி..
பகல் முழுதும் உழைத்து களைத்து உடல் வலிமையிழந்து வந்த தலைவன் தன்னவளின் நிலவழகு கண்டு களைப்பு மறந்து காதலோடு அவளை நோக்கினான்...
அட டே!!!! மாலை நேரமென்பது காதல் செய்யும் தலைவனுக்கும் தலைவிக்கும் கிடைத்த கனியமுது போன்றது தான்!!

மேலும்

விக்னேஷ்முருகன் - விக்னேஷ்முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2021 9:24 pm

முதற் பருத்தி நூலெடுத்து பட்டுத்தறியில் நெய்த புடவையுடன் முல்லை மலர் குழல் சூடி நெற்றியில் வண்ண திலகமிட்டு தன்னவள் வருகை கண்ட தலைவன் மனமானது ஜில்லென்ற பனிகாற்றில் வான்மேகம் கலைந்து வானவில் வட்டமிட மண்வாசனை மணத்தோடு வண்ணமயில் ஒன்று தோகை விரித்து தன் மெல்லிடை அசைத்து சங்கு கழுத்தை ஆட்டி அசைந்து வருவதாய் உணருமாம்....

மேலும்

மிக்க நன்றி தோழி 25-Dec-2021 10:43 pm
அருமையான வரிகள்🥰🥰🥰 25-Dec-2021 8:39 pm
விக்னேஷ்முருகன் - விக்னேஷ்முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2021 12:02 am

அன்பென்ற மந்திரச்சொல் அகிலமெங்கும் ஒலித்திடவே வின்னுலகின் தேவன் அவன் மலர்ந்திட்ட நாள் இதுவே..

மண்ணுலகம் மகிழ்ந்திடவே மரியம்மை புதல்வனாய் மன்னன் அவன் தோன்றிய நாள் இதுவே..

மாந்தரெல்லாம் மனமுகிழ மகிமை தரும் பாலன் அவன் மண்ணுலகில் உதித்திட்ட நாள் இதுவே...

வேதனைகள் தீர்ந்திடவே வேதம் பல சொல்லித்தர அரசன் அவன் பூவுலகில் பிறந்திட்ட நாள் இதுவே...

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்🎅🤶🧑‍🎄🎅🧑‍🎄

மேலும்

விக்னேஷ்முருகன் - விக்னேஷ்முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2021 9:24 pm

முதற் பருத்தி நூலெடுத்து பட்டுத்தறியில் நெய்த புடவையுடன் முல்லை மலர் குழல் சூடி நெற்றியில் வண்ண திலகமிட்டு தன்னவள் வருகை கண்ட தலைவன் மனமானது ஜில்லென்ற பனிகாற்றில் வான்மேகம் கலைந்து வானவில் வட்டமிட மண்வாசனை மணத்தோடு வண்ணமயில் ஒன்று தோகை விரித்து தன் மெல்லிடை அசைத்து சங்கு கழுத்தை ஆட்டி அசைந்து வருவதாய் உணருமாம்....

மேலும்

மிக்க நன்றி தோழி 25-Dec-2021 10:43 pm
அருமையான வரிகள்🥰🥰🥰 25-Dec-2021 8:39 pm
விக்னேஷ்முருகன் - விக்னேஷ்முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2021 5:03 pm

பசியால் அழும் மழலைக்கு தன் தாய் கரம் தொட்டு கிடைக்கும் ஒரு துளி நீர் கூட ஓர் குவளை அமிர்தத்துக்கு நிகராகுமாம்!!!

மேலும்

விக்னேஷ்முருகன் - விக்னேஷ்முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2021 4:12 am

வண்டுகள் பூவிலிருந்து சேமிக்கும் தேனின் சுவையானது காற்றிடைப் புகாத தழுவலில் தலைவனும் தலைவியும் ருசித்திடும் சுவையை காட்டிலும் சற்று குறைவானதே தான்!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே