ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

கடந்து செல்கிறது 2021
உடன் அழைத்து செல்கிறது
முடிந்த நிகழ்வுகளை !
நிலைக்கிறது சில நெஞ்சில்
மறக்கிறது மனம் பலவற்றை
வாழ்வில் நிதர்சனம் இது !

பலரின் இழப்பைத்
தாங்குது இதயம் ,
சிலரின் மறைவால்
வலிக்கிறது உள்ளம் ,
உடைந்து சிதறுகிறது
உருமாறுது சிந்தை
சில நிகழ்வுகளால் !

நலிவடைந்த 2020
நலம்பெற்று வருகையில்
நலிவுறுமோ என்று
நினைக்கிறது மனம்
நல்லதே நடக்குமென
நினைத்து வரவேற்போம்
வருகின்ற 2022ஐ !

கொடூர கொரானாவும்
ஒமைக்ரானும் ஒழியட்டும்
நலமும் மகிழ்ச்சியும்
நிலைத்து ஓங்கட்டும் !
சீரடைந்த தாயகம்
வளமான தமிழகம்
உருவாகட்டும் !

மலரவுள்ள புத்தாண்டில்
ஏற்றங்கள் நிகழட்டும் !
சாதிமத பேதங்கள்
மண்ணில் மறையட்டும் !
ஏழைப் பாழைகள்
ஏற்றம் அடையட்டும் !
சமத்துவ சமுதாயம்
உதயமாகி ஒளிவீசட்டும் !


அனைவருக்கும் உள்ளம் நிறைந்த
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !


Wish you all
HAPPY NEW YEAR 2022
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Dec-21, 3:48 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 181

மேலே