காறாக்கருணைக் கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஞால மதிற்கபநோய் நாடாது வாதமறும்
மூல முளையிரத்தம் முன்பொழியும் - ஓலமிட்டு
மாறாக் கனல்மந்த மாறுமதி தீபனமாங்
காறாக் கருணைதனைக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கிழங்கு சிலேட்டும் நோய், வாத நோய், இரத்த மூல முளை, அக்கினி மந்தம் இவற்றைப் போக்கி பசியை உண்டுபண்ணும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-21, 9:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே