காறுகருணைக் கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கரப்பான் சிரங்குசொறி காணாக் கிரந்தி
யுரப்பாக்கும் மூலநோ யோட்டும் - நிரைப்பான
மந்தமொடு கோழைதரும் மாறாத் தினவுநல்கும்
அந்தமிகுங் காறுகரு ணை

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கிழங்கு கரப்பான், பொடி சிரங்கு, சொறி, உட்கிரந்தி, கபக்கோழை, மந்தாக்கினி, நமைச்சல், மூலம் ஆகியவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-21, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே