தெளியும் தெளிதமிழரே
நேரிசை வெண்பா
உலகத்தார் உண்டென்ப இல்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படுமாம் -- விலகாது
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
குறள் வெண்பா
தெளிதமிழ் பேரறிஞ ரின்னும் தெளியாக்
களிக்கும் திராவிடராம் பார்
பாரத உலகத்தின் பெருமக்கள் உண்டென்று வணங்கும் சைவததின் ஈசனை இல்லை என்று
மறுக்கும் எவரும் பேயாக உலகு கருதவேண்டும் என்றார் வள்ளுவர். மேலும் பாரத்ததின்
பெருங்குடிமக்கள் தாங்கள் வணங்கும் சைவத்தின் சிவன் முருகன் திருமால் விடுத்து
,பொய்யென்று ,வேறு தெய்வத்தை வணங்குவார்களை செத்தாருள் வைத்திடுவர்