அன்றொருநாள் அவள் மடியில்
நிலவொளி சிந்திடும் இரவு
கிளையினில் பறவைகள்
கீரொளி எழுப்பி
உறவுகள் கொண்டிடும் தருணம்...
உன்னோடு சிறு பேச்சு
கொஞ்சலிலோ இல்லை மிஞ்சலிலோ...
மடிமீது கிடத்தி
மார்போடு உழன்று
உன்னில் நான் சேரும்
உலகம் தருவாயா..?
கிளியே உன் பேச்சு
கீதமாய் நான் கேட்டு
சகியே உன் சரணம்
சாகும் வரை வேண்டும்.
இரவுகள் புலர்ந்திடும்
உன் இடைவெளி
விரும்பாதே...
அந்தப் பகல் மீது
பழி சுமத்தி
பழி தீர்ப்போம் வருவாயா...
இடைவெளி வேண்டா
நம்மிரவு
உன் இடைமீது பரவட்டும்.
நதி பேசும் அலையோடு
என் நளினமே...
உன் நடையும் சேரட்டும்
இதுதான்...
இதுதான் வேண்டும்
அன்னமே
என் அழகிய நிலவே...!
என் உறவே
உயிரே...!
என்னோடு உருவாகும் கண்ணிரே...!
கலையே கணமே
திரையே...
தினமும் எனைமூடும்
இமையே..!
இமைக்குள் இருக்கின்ற
விழியே..!
உன் வரவைக் காணாத
வலியே...
துளியே...
என்னோடு வாழும்
துணையே...
கதியே...
என் காலமே
என்னில் கரைந்தோடும்
வயதே...
வாலிபமே
வசந்தத்தின் நிலையே...
என் முதலே
முடிவே
உள்முச்சு நீயே...
நான் காணும்
இடமெல்லாம் நீயே
என்வாழ்வின் நிரந்தரமே.