காதலும் முத்தமும்
அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா
காதலாம் கத்தரிக்காய் கப்பைக் கிழங்கென்றார்
வேதனை யின்பி ரிவினைகள் -- பூதமான
சோதனைகாண் பித்தமேறி முத்தமென்ற பற்றிலாப்
பாதகர்க ளைவாயப் பா
காதலென் பதிரு மனமொத் திடத்தான்
கண்ணோ டுக்கண் ணினைநோக் கொக்கின்
வாய்சொற் களென்னப் பயனும் இல்லை
வாய்ப்பேச் சிற்க்கே யிடமில் லையாம்
ஒருவனுக் குமொருத் திக்கும் பிறக்குமாம்
காதல் இரகசி யமேயடிக் கார்தம்
பட்டம் தோழர் தோழியர் அறிவர்
காதல் கவிதை என்ற பெயரில்
கொச்சை வார்த்தை யாலே யாப்பிலா
பேச்சில் பச்சை பச்சையாய்
எழுதி நீசாய்த் ததென்ன சொல்லுமே
..