காதல் மன்னன்

" காக்கை சிறகை பார்க்கையிலே
அவன் காதல் மொழி கூறும்
விழியது தெரிகிறதே!

பச்சை மரங்களை பார்க்கையிலே
அவன் பசுமையான பாசமது தெரிகிறதே!

குழலும், யாழும் ஒலிக்கையிலே
அவன் தேன்குரல் ஓசையது
கேட்குதே!

அந்த கண்ணனை போல
என் நாதனும் காதலில்
மன்னனோ?

கோதைப் போல் இப்பேதையும்
ஆசையில் பாட்டிசைப்பேனோ? "

எழுதியவர் : (31-Dec-21, 7:33 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kaadhal mannan
பார்வை : 134

மேலே