நீர்ஆரைக் கீரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தின்றால் உரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை - என்றுமிந்த
ஊராரைச் சாராமல் ஓட்டிவிடும் நாலிதழாம்
நீராரைக் கீரையது நீ
- பதார்த்த குண சிந்தாமணி
இக்கீரை பித்தம், அதி மூத்திரம், இரத்தப் பிரமேகம் இவற்றை நீக்கும்