மணலிக்கீரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதமறும் நெஞ்சேறி வந்த கபம்விலகும்
சீதமுடன் நோய்பலவுந் தீருங்காண் - போதவுள்ளே
வீறு கிருமியொடு மேவாப் பயித்தியம்போங்
கூறுமண லிக்கீரைக் கு
- பதார்த்த குண சிந்தாமணி
வாதம், கபம், மார்புச்சளி, சிலேட்டுமம் முதலான பல நோய் களையும்; கிருமிநோய், பயித்தியம் இவற்றையும் மணலிக்கீரை நீக்கும்