அவள் விழிகளுக்குள் நான் கண்ட நிலவு

இதோ வெள்ளிமணலாம் ஆற்றங்கரையில்
நானும் நீயும்; பேசாதிருக்கும் உன்முகத்தையே
கண்டு ரசிக்கும் உன்காதலன் நான் உன்னருகில்'
உன்விழிகளையே பார்த்து பிரமித்து இருக்கும்நான்
உந்தன் கண்ணின் மணிகளில் வெள்ளிநிலவைகண்டேன்
உங்கண்ணன் அழகில் மயங்கியதோ அந்த தண்ணிலவும்
மயங்கி சிறைப்பட்டதோ உந்தன் கண்ணின் மணிக்குள்
உந்தன் நயனங்களின் அசைவில் சிதறி ஆயிரம்
பிம்பங்களாய்க் காட்சிதரும் நிலவு
ஒருநிலவாம் உன் முகத்தில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jan-22, 5:16 pm)
பார்வை : 154

மேலே