பேராசைக்காரி
"ஒரு நொடியில் பறித்த
என் இதயத்தை,
ஏழேழு ஜென்மத்திற்கும்
வைத்துக் கொண்டாய்!
அந்த நொடி தந்த சுகத்தை,
ஏழேழு ஜென்மத்திற்கும்
சேர்த்து வைக்க, எனை
ஏங்க வைத்து சென்றாய்.
அந்த பொல்லாத காதலை
எனக்கு தந்தாய்,
என்றும் இல்லாத பேராசை
காட்டி எனை கொன்றாய்!".