காதல் வழியில் 💖

நான் போகும் பாதையில் புது

விடியல் பிறக்கிறது

அதை நோக்கி மனம் போக

சொல்கிறது

இயற்கை அழகை கண்கள்

ரசிக்கிறது

அந்த அமைதியான தருணத்தை

இதயம் நேசிக்கிறது

ஓடும் நதியின் சத்தம் காதில்

கேட்கிறது

கொஞ்சும் கிளிகள் வானில்

பறக்கிறது

ஒரு கால் அடி தடம் என் கண்ணில்

தெரிகிறது

ஒரு சிரிப்பின் ஓசை என்னை தாண்டி

செல்கிறது

அதை தேடி என் மனம் முன்னால்

போகிறது

பூக்களின் வாசம் ‌ காற்றில்

மிதக்கிறது

தேவதையே என் கண்ணில் பட்டது

எழுதியவர் : தாரா (4-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 345

மேலே