ஈருடல் ஓருயிர்

காலச்சக்கரத்தில்
சுழன்று வந்த
கூட்டுவண்டி நாம்...

காக்கிடவுசரை
தபால்பெட்டியாக்கி
வெள்ளச்சட்டையில்
மை அடித்து...

சிம்மி நாய்க்கு
சிகை அலங்காரம்
செய்து...

டைகர் நாய்க்கு
டவுசர்போட்டு

சின்னாத்து
தண்ணியில
பானைபிரி மீன்பிடித்து...

நம் ஆத்து
தண்ணியில
அரைநீச்சல் பழகி....

ஆத்தோரம்
சம்மாதி அதனோரம்
நாணல்தட்டை....

காற்றடித்து
சாய்ந்தபோது
கண்கலங்கி
பரிதவித்தோம்...

தைமாத
பொங்களிலே
நாணல் தட்டை
பீப்பிசெய்து....

நம்ம ஊரு
தெருவுல
தெருக்கூத்து
நடத்திவந்தோம்....

உன்பாட்டி இராஜானு
உன்னை கூப்பிட
மந்திரியாய் நானும்
வந்தேன்.....

பள்ளிக்கு
கிளம்புமுன்னே
பகலவனாய் நீ
தெரிவாய்..
பறட்டையுடன்
நான் திரிவேன்

ஒத்தையடி
பாதையில
நாம் நடந்த வாழ்க்கையில....

எத்தனையே பெற்றுவந்தோம்
எதிர்கால வித்தையெல்லாம்
கற்றுவந்தோம்.....

கணக்கப்பிள்ளை வீடுயென்றால் கருங்குயிலும்
கத்துமடா....

கட்டுத்துறை
மாடுகூட
பாசத்தோடா அழைக்குமடா......

பட்டிதொட்டி
ஜனங்களோட
பிரச்சினையை தீர்த்துவைக்கும்
நீதிமன்றம் உங்கவீடு...

நித்தம் நித்தம்
கதைகேட்டு
நீதிமானாய்
நாம் வாழ்ந்தோம்....

நித்திரையை தொலைத்துகூட
புலியாட்டாம் ஆட்டம்
ஆடிவந்தோம்....

அணைமீது
துள்ளிவரும்
மீன்போல
உலாவந்தோம்....

உன்னோடு
நானும்
என்னோடு
நீயும்...

புற ஊதாக்கதிர்
போல -புறமுதுகில் உப்புமூட்டை தூக்கி....

மின்காந்த ஒளி
அலையாய்
மின்னல் மீனாச்சிபுரத்தில்
மின்மினி பூச்சியாய்
உலாவந்தோம்.....

நீயும் ஐந்து
நானும் ஐந்து
இருவரும் பிறந்த
தேதி ஒன்றே....

ஒன்றாம் வகுப்பில்
ஒன்றாய் சேர்ந்து
ஒரே தட்டில்
பிசைந்து உண்டு....

பிரம்மன்
வாத்தியாரிடம்
பிரம்படி வாங்கி....

முத்தாநாய்க்கர்
குதிரைபோல்
முன்னங்கால்
தெறிக்க ஓடி...

கவர்மென்ட்
காக்கி டவுசர்
காலோடு
கலண்டுவர

அரைஞாண்
கயிற்றில்
இழுத்து
சொறுகி....

அரைகாத
தூரம்
ஓடியபோது
ஐய்யர்
வீட்டு நாய்
துரத்திய நாட்களை.....

நீயும்
நானும்
பசுமையாய்
நினைக்கிறோம்....

கடலை
காதலித்து
கரைசேர்ந்த
கப்பலாய்....

நீயும்
நானும்
தொலைவில்
இருந்தாலும்

காலச்சக்கரத்தின்
ஓட்டத்திலே
பகலும் இரவுமாய்
நாமிருப்போம்....

பன்றிகளின்
கூட்டத்திலே
சிங்கங்களாய் நாம்மிருப்போம்...

நாம் வாழும்
காலமெல்லாம்
வானவில்லாய்
தோன்றிடுவோம்
ஒரே சிந்தனையில்
ஈருடலாய்
வாழ்ந்திடுவோம்.

எழுதியவர் : கவிஞர் மின்னல் (5-Jan-22, 4:17 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 177

மேலே