அழகிய அவள்

அழகிய அவள்;
அதிசயம் இவள்;
இவள் தான் அவள்;
பழகிய இவள் விழிகள்,
எழுதும் பல கோடி மடல்;
பருவம் சுமக்கும் உடல்,
பார்த்து பழகினால் ஊடல்.
.
அழகிய அவள்
அவள் தான் இவள்
அத்தியாயம் இவள்.
துள்ளும் மீன்களின் விழிகள்
கொல்லும் இவள் கொள்ளை அழகால் வசியம் தான் செய்து விட்டாள் இவள்;

மையிட்ட இவள் விழிகள்,
மின்னிடும் மின்னல்.
மயங்கித்தான் போனேனே இவள் பின்னால்.

புருவம் சுழிக்கும் விழிகள்;
புகுந்திட தவித்தேன் நாள் முதல்.

இரு விழிகளின் தேடல்;
இதயம் இசைக்கிது பாடல்.
வருடிய காதல்;
வந்தே போடுது மோதல்.

விழிகளில் வழிந்தே ஓடும் காதல்
விடாமல் பிடித்தாலே
விருந்தாகிடும் காதல்.

இதமான சாரல்,
எடுக்குது கூதல்;
பழுத்து கிடக்கும் காதல்,
பசி ஆத்தத் துடிக்கிது இந்த காதல்.

அவள் தான் அவள்
இவள் தான் அவள்
கண்டும் காணமல் போனாலோ எடுக்கும் வாடல்.

பகைக்காத பொழுதில்,
பழகிடத்துடிப்பதோ ஆவல்,
பருகிட இவளொரு தேரல்,
பக்கத்தில் வந்தால்
நித்தம் நீந்தும் இன்பக்கடல்.

கல கல சிரிப்பில்,
துவங்குது தேடல்,
பல பலக்கும் இந்த காதல்;
பக்கத்தில் வந்தால் இவள் ஒரு கொண்டல்.

சுத்தி சுத்தி வந்தால்
பத்திக்கொள்ளும் ஆசை நெருப்பில்,
மோகத் தீ தான் இவள்.

அழகிய அவள்;
தூக்கங்களை தூக்கிச் சென்றவல் அவள்.

கோதை இவள்;
பேதைதான் இவள்;
போதை ஏற்றும் இவள் ;
இவள் விழிகலோ தரும் பல நூறு கவிதைகள்.

வாசகியாக வந்த சகி இவள் ;
வம்பாய் மனதுக்குள் குடி கொண்டு விட்டால் இவள்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (6-Jan-22, 8:57 pm)
Tanglish : alakiya aval
பார்வை : 186

மேலே