உன்னை நான் கேட்காமலே

சந்திரனைக் கேட்டேன்
தேயாதிரு என்று
சாத்தியமில்லை என்றது


சாரலைக் கேட்டேன்
தொடர்ந்து தூறிக் கொண்டிரு என்று ...
அதெப்படி என்று திருப்பிக் கேட்டது


அந்திவானத்தைக் கேட்டேன்
மறையாதிரு என்று...
இரவின் ஆட்சியில் எனக்கு அனுமதி இல்லை என்றது


தேயாத நிலவாக
தொடந்து தூவும் சாரலாய்
மறையாத அந்தி வானமாய்
நீ என் முன் வந்தாய்
உன்னை நான் கேட்காமலே
!

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-22, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே