அழகு ஓவியமே

என் இனியவளே
உன்னழகை வர்ணித்து
கவிதைகள் எழுதி
கவிஞனாக நினைத்தேன்..!!

ஆனால்
கவிதை எழுதும்போது
என் பேனா முனை
உன்னழகை குத்தி
காயப்படுத்தி விடுமோ
என்று நினைத்து
அந்த எண்ணத்தை
கைவிட்டேன்...!!

பிறகு
என்ன செய்வது என்று
சிந்தித்தேன்....முடிவில்..!!

தூரிகைக்கொண்டு
உன்னழகை
ஓவியமாக வரைந்து
ஓவியனாக மாறிவிட்டேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jan-22, 6:23 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : alagu ooviyame
பார்வை : 1842

மேலே