திருநாள்
💐" திருநாள் "💐
" நல் நிலத்தை தேடி ,🏞
நெல் மணி விளைச்சல்தனை
நாடி ,🌾
சுள்ளென தொடும் வெயிலிலும் ,💥
ஜில்லென விழும் மழையிலும், 🌧
கல்லென உடையாது உழைத்து,💪
நற்பலனை பேண, 🎆
அறுவடைதனை காண, 🌽
அயராது ஓடி,🏃♂
சோற்று கவலை இல்லாமல்
நாம் உண்ண,🥙
சேற்று கலவையிலே
காலமெல்லாம் நின்ன,🚹
உழவர் பெருமக்கள்தம் பெருமை,
பேசினால் மட்டும் போறுமோ
இன்றொரு நாள் கூடி.?👈
இந்த உழவர் திருநாளில் ,
உன்னத உழைப்பை கொண்டாடும் பெருநாளில் ,👌
அவர் அகமும், புறமும் என்றும் போகக்கூடாது வாடி,🖐
என நாளும் ஒரு நொடி
பொழுது நினைத்து விட்டாலே
வந்து சேரும் புண்ணியம் கோடி!".🙏
உழைப்புக்கு என்றே உழவர்கள்! 👈
உணவுக்கு என்றுமே உழவர்கள்!👈
அந்த நன்றியை மறப்பது நன்றன்று,
அதை இன்று நினைத்துப் பார்ப்போம்
மேலும் சிறப்பு என்று."🙏🙏🙏
"பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்".
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐