பற்பாடகம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சீதவா தச்சுரமுத் தீராத தாகமும்போம்
போதவிரு கண்குளிரும் பொய்யலவே - பூதலத்துள்
வற்பார் பயித்தியமு மாபித்த முந்தொலையும்
பற்பாட கத்தையுன்னிப் பார்
- பதார்த்த குண சிந்தாமணி
பற்பாடகத்தில் சீதவாத சுரம், பித்தகாசம், உளைமாந்தம், பித்ததோடம், தீராத தாகம் இவை போகும்; கண் குளிரச்சியடையும்