அந்தரத் தாமரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அழுகிரந்தி குஷ்டம் அடர்ந்த கரப்பான்
புழுவுறுமக் கூடுமுதற் போகும் - அழகாரும்
இந்திரநீ லக்கருங்கண் ஏந்திழையே யெப்போதும்
அந்தரத் தாமரையா லாய்
- பதார்த்த குண சிந்தாமணி
இத்தாமரை அளிந்தபுண், குட்ட மடர்ந்த கரப்பான், மார்பில் கட்டும் கிருமிக்கூடு முதலிய நோய்களை நீங்கும்