தைமகளே வருக வருக
தைமகளே வருக! வருக!
தமிழனின் மென்மையான வெண்ணிற மகளே வருக !
வெண்பொங்கல்களைப் போல் மனதை மென்மையாக்கு !
உள்ளம் மகிழ! தமிழனின் வரலாற்றை என்றும் வளர்க்க !
முத்தமிழை முழுமையுடன் உலகுக்குத் தருக்க!
தை மகள் வருக! வருக! தமிழனை உயர்த்திட வருக!
ஏற்ற தாழ்வினை மலர்ந்திடத் திருமகளே வருக!
உள்ள மலர உத்தமர் மலர்ந்திடத் திராவிட மகளே வருக !
உலகெங்கும் உரிமை கொள்ள மணிமொழியே வருக!
தங்கவயலின் தமிழே!தன்நம்பிக்கை வளர திருமகளே வருக!
தனிப்பெரும் நாட்டில் தன்னாட்சி மலர தமிழ் மகளே வருக!
தொன்மை மொழியாம் செந்தமிழ் மொழியை
தமிழின் மண்ணில் மலரச்செய்வாய் பொன் மகளே! வருக!
பண்பும் பாசமும் தமிழனின் மலர கலை மகளே வருக!
தமிழின் ஒற்றுமை பேச்சில் இருந்தால் போதாது
வாழ்விலும் இனத்திலும் உழைப்பிலும் மலரச் செய்வாய்!
இலக்கிய நயங்கள் கல் தூய்மையாகி தமிழன்னையே வருக!
வையகமெல்லாம் தூய்யதமிழில் உரைப்பாய்!
உயிரும் மெய்யும் உணர்வும் ஒன்றாகக் கண்மலரே
உயர்ந்தே நிலைத்துத் தொழுவாய் தமிழ் அன்னையை
ஊற்றாய் உள்ளத்தில் அன்பும் பாசமும் பொங்கிட
உற்றார் உறவினர் கைகோத்து மலந்திடதைமகளே வருக!
சங்கம் வளர்த்த சான்றோர் கலப்பு மொழியில்லாமல்
தூய்மை தமிழில் அனைவரும் பேசிடத் தமிழ் மகளே வருக !
உன் வருகை ஆடிப்பாடி ஆனந்தத்தோடு செந்தமிழ் மகளே வருக!
நெல்மணிகள் தந்து வயலும் காத்திட நிலமகளே வருக!
தை மகளை வருக தமிழரின் நல்வாழ்வைத் தந்திட வருக!
மகள் வருகிறாள் தரணி மணக்க புதுமை மகளை வருக!
தரணி மணக்க தைமகளே வணங்கி வரவேற்போம்!
எண்ணியவை எல்லாம் ஈடேற இனிய நாள்பிறிந்திட
நாம் செய்த புண்ணியங்கள் துணை வர தை மகளே வருக!
கடமைகள் கண்ணியம் தவறாமல் மக்களின் நன்மை செய்ய
கருணை மிகுந்தவளே! எங்கள் திரு மகளே நீ வருக!
வருகின்றனரா நாளில் வாழ்க்கை இனிமை நிறை
புதிய எண்ணங்கள், நன்மை புலந்துவரத் தமிழ் மகளே நீ வருக!
புதிரான உலகத்தில் புதுமைகள் பூத்துவர
சதிராடும் தைமகளே தமிழ் மகளே வருக!