இதயமே இதயமே
இதயமே! இதயமே
!
இடம் மாறிப்போனது;
நேற்றை நினைத்து பூத்த நினைவுகள்,
இன்று செஞ்சை வருடு;
பார்த்து பார்த்து வளர்த்த பாசம் தான்
பாதை மாறிப்போனது.
பாசமழை பொழிந்த உறவுகள்,
இன்று பயத்தைத்தான் மூ(ஊ)ட்டுது
கண்கள் சுமந்த இமையாய் இருந்து,
கனவாய் போனாய் இன்று
கவலைகளை கண்ணீராய் சுமந்து
கரைதேடி அலைகின்றேன் இன்று
இதயமே இதமே என்னை விட்டு பிரிந்தது ஏன் ?
நினைவுகளின் நினைவே நினைவே,
வந்து வந்து வருடிப் பார்ப்பதும் ஏன்?
உறவே, உறவே;
கலங்காதிரு;
நிகழ்வும், நிகழ்வும்,
இடம்மாறுது:
உறவும், உறவும்,
தடுமாறுது:
உதிரம், உதிரம்,
கடலானது.
அன்பே, அன்பே,
அனாதை ஆக்கியது ஏன்.
என் நெஞ்சே நெஞ்சே;
உயிரும் உயிரும் உடன்கட்டை ஏற தவிக்குது.
உன்னோடு உன்னோடு உறவாடிய,
உறவும் பிரிவும் துயரானது,
வாழ்வே வாழ்வே,
ரணமானது;
வாழ்நாள்! வாழ்நாள்! எல்லாம்
சுமையானது.
நேற்றை நினைத்து பூத்த நினைவுகள்,
இன்று செஞ்சை வருடு;
பார்த்து, பார்த்து வளர்த்த உறவுதான்;
பாராமல் நெஞ்சை
பாரமாக்கி விட்டு போகுது.
சொந்தம் தேடிய உறவுதான்;
திசைமாறிப் பறந்து போனது;
சோகத்தின் சுமைகள் தான்,
கண்ணீராய் வடிந்து ஓடுது.
இதயமே! இதயமே!
இரும்புச்சிறையாய்,
நினைவுகள் சிறைபட்டு கிடக்குது.
இதயமே! இதயமே!
இருகித்தான் போனது,
இடம் மாறிப்போனதால்
எட்டிப்பார்க மறந்தது;
இரவும் பகலும் என் விழிகள்
வழிந்தே தவிக்குது
நிலவில்லாத இரவைப்போல்,
பகல் இல்லாத பொழுதைப்போல்,
நினைவில்லா உடலைப்போல்,
நிழல் இல்லாத மரத்தைப்போல்,
உணர்வில்லா உயிரைப்போல்,
பார்வை இல்லாத, மனிதனைப்போல்
வாடுதே.
சுவையான உணவு தான், சுத்தமாய் கரிப்பது,
இன்றுதான்,
சொந்த பந்தம் தேடும் இதயம் தான்
சோகத்தில் வாடுவது இன்றுதான்,
நாட்கள் சுமந்த நினைவுகள் தான்;
நடைபிணமாக்கியே,வேடிக்கைப்பாக்குது.
நேற்றை நினைத்து பூத்த நினைவுகள் இன்று செஞ்சை வருடு