உதிர்ந்த மலர்கள்

பூக்களின் இதழ்கள் போல்
அவளின் மெல்லிய இதழ்களின்
தேனைச் சுவைத்துப் பருகினேன்
அந்தநாள் நினைவுகள் இன்றும்..
ஆயினும் இடைவெளியில்லாமல்
புதுமை பறவை புலரும் மனதில்
முன்னுரவு இருவரும் இதயத்தில்
இடைவிடாத மயக்கங்கள் கொண்டவை!
தெரியாத உணர்வுகள் உள்ளத்தில்
அறியாத அன்பு விளைந்தது மனதில்
இடையூறு இல்லத்தின் பிளவுகள்
அறியாத உறவு பிரிந்த மனங்கள்
அன்பே தொலைதூரம் சென்றாலும்      வெகுதூரம் பயணித்தாய்!
எண்ணருகில் நினைவுகள் என்றும்
கண்ணெதிரே தொன்றுகினறது
மறந்து பொன மகிழ்ச்சியை
மறுபடியும் மலர் செய்வாய் யென
நினைத்து மௌனமாகவே உன்னில்
மயங்கித் தவிக்கிறேன்!
விடுதலையில்லா காதல் துவக்கம் மனத்தில் முத்திரையாகப் பதிந்தது!
இறுதி வரை எண்ணித் திணறுகிறேன்
இடைவிடாத அன்பின் ஏக்கம் ஓயவில்லை!
காலம்  செய்த கோலத்தால் கலைந்தும் போன உறவு! காத்திருந்தேன்!
மறந்து விட்டாய் கண்ணில்
தென் படவில்லை!
பல ஆயிரம் நாட்கள்  கண்டதும்,
குன்றிய மலராய் கண்ட பொழுது
உள்ளம் துடிக்கிறது அழகு தெய்வமாய்,
விழுந்து கிடந்தாய்! என் நெஞ்சமும்
சாய்ந்ததே! ஓசையின்றி பேசி, என் மனம்
குளிரச் செய்தாய் !  விழி மொழியின்
அன்பின் பதிலை என் மனதில் பதித்தாய்!
இனி என்று காண்பாய் அழகு மலரே!
மெல்லிய குழலிசையாய் உன்
குரல் மழலையின் மொழியானவள்
விழிகள் கழியல் போன்றது மேனியின்
அழகு மேனகையும் விழுந்திடுவாய்
உன் அழகு!  வருணிக்க ரவிவர்மன்  இல்லை, கம்பனின் கவிபாடும்
உடல்களின் நயங்களைக் கண்டு!
இத்தனை சிறப்பினை உன் கண்டு
இதயத்தில் மலர்ந்தவள் நீ! என்னில்
இல்லாமல் போனது எங்கே!
உமது பாதை ஒளியில்லாமல் போனது
உரைப்பதற்கு ஏதுமில்லை!
எனது பாதை வேற்றுப் பாதையாகும்
விடை பெறவில்லை ! நினைக்கிறேன்!
காலத்தின் தோற்றம் கணக்கிட  முடியவில்லை! கடவுளால் நியமித்தது!
பாதையில் பயணிப்போன் நினைவோடு
எழுதுகிறேன் ஏட்டிலே கவிதையாக!

எழுதியவர் : (18-Jan-22, 10:20 pm)
Tanglish : uthirntha malarkal
பார்வை : 136

மேலே